ஆஸ்ரேலியா – நியூசிலாந்து பறப்பின்போது 50 பயணிகள் காயம்!!
ஆஸ்திரேலியாவில் இருந்து நியூசிலாந்து நோக்கி பயணித்த விமானத்தில் ஏற்பட்ட தொழிற்நுட்ப கோளாறு காரணமாக பயணிகள் பறப்பின் போது காயமடைந்தனர்.
விமானத்தில் 50 பயணிகள் காயமடைந்தனர். விமானம் நியூசிலாந்தில் ஆக்லாந்தில் தரையிறங்கியபோது 12 பேர் நோயாளர் காவு வண்டிகள் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அவசர சேவைகள் தெரிவித்தன.
சிட்னியில் இருந்து புறப்பட்ட போயிங் 787 ட்ரீம்லைனரில் பயணம் செய்த 50 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாக நியூசிலாந்தில் சென்ஜோன்ஸ் நோயாளர் காவு வண்டி சேவை கூறியது.
விமானம் பயணித்த போது விமானம் தீடீரென கீழ் நோக்கி உயரத்தைக் குறைத்தது. இதனால் பயணிகள் விமானத்தின் கூரைப் பகுதி மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் முட்டி மோதினர். இச்சம்பவத்தினால் பலருக்கு காயங்கள் ஏற்பட்டன. தலையில் இருந்து குருதி வழிந்தன. பயணிகள் கூச்சலிட்டு அலரினர்.
தொழிற்நுட்பப் பிரச்சினைக்கு என்ன காணரம் என்று இதுவரை தெரியவரவில்லை. பின்னர் விமானம் சீராகப் பறந்தது நியூசிலாந்தை வந்தடைந்தது.
லாடம் ஏர்லைன்ஸ் நிறுவனம், இந்தச் சூழ்நிலையில் பயணிகளுக்கு ஏதேனும் அசௌகரியம் மற்றும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தால் அதற்கு ஆழ்ந்த வருத்தம் எனத் தெரிவித்தது.
விமானம் திட்டமிட்டபடி ஆக்லாந்து விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த விமானம் ஆக்லாந்தில் இருந்து தென் அமெரிக்க கேரியர் அமைந்துள்ள சிலியின் தலைநகரான சாண்டியாகோவிற்கு பறக்க திட்டமிடப்பட்டது.
விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளது மற்றும் புதிய விமானம் செவ்வாய்கிழமை திட்டமிடப்பட்டுள்ளது என்று RNZ தெரிவித்துள்ளது.