வெடுக்கு நாறியில் பொலிசாரின் மேற்கொண்ட அட்டூழியத்தை கண்டித்து யாழில் போராட்டம்

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் மகா சிவராத்திரி பூசையின் போதான பொலிஸாரின் அட்டூழியங்களைக் கண்டித்தும், கைது செய்தோரை உடன் விடுதலை செய்யவும் வலியுறுத்தி இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை நல்லை ஆதீன முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்புச் சார்பாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு. அகத்தியர் அடிகளாரின் அழைப்பு ஏற்று பலர் ஒன்று கூடி போராட்டத்தை முன்னெடுத்தனர்