வெடுக்குநாறி மலை ஆதிசிவன் மதவழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமைக்கும்,எதிரான அகிம்சைப் போராட்டம்10.03.2024

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில், சிவராத்திரி நாளில் மதவழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமைக்கும்,அராஜக வெறியாட்டத்திற்கும் எதிரான அகிம்சைப் போராட்டம்
இடம் – காந்தி பூங்கா, மட்டக்களப்பு,
காலம் – 10.03.2024 ( நாளை )
நேரம் – காலை 9.30 மணி
எங்கள் தேசத்தில், எங்கள் புராதன ஆலயத்தில்,எங்கள் மக்களுக்கான மத கலாசார உரிமை காவல் துறையினரால் மறுக்கப்பட்டுள்ளது……
அடாவடித்தனமாக மதத் தலைவர்கள்,பூசகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்,பெண்கள் உட்பட பக்தர்கள் அவமரியாதைப்படுத்தி பலாத்காரமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்……
இதனைக் கண்டித்து அகிம்சை ரீதியாகப் போராட அனைத்துத் தமிழ் உறவுகள், மதப்பெரியார்கள்,சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமையாளர்கள்,அரசியலாளர்கள், வாலிபர்கள்,மகளிர் அனைவரையும் உரிமையோடு அழைக்கின்றோம்.
‚உரிமைகள் மறுக்கப்படும் போது ஊமைகளாய் இருக்க முடியாது‘
எம் தமிழினத்தின் உரிமை காக்க அனைவரும் வருக, ஒத்துழைப்பு தருக…..
இதனைப் பொதுவான அழைப்பாகக் கொள்ளுமாறு அன்பாக வேண்டுகின்றோம்……
தமிழ்தேசிய உணர்வுள்ள தமிழர்கள்..