ரம்பாவின் கணவர் யாழ்.யூடியூபர்ஸ்க்கு தடை
யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற ஹரிகரன் இசை நிகழ்வை தமது யூடியூப் சேனலில் பதிவேற்றியவர்களுக்கு நொர்தேன் யூனி நிறுவனத்தினரால் ஸ்ரைக் அடிக்கப்பட்டுள்ளது.
யூடியூப் சேனலுக்கு மூன்று ஸ்ட்ரைக் வந்தால் , அந்த சேனல் நிரந்தரமாக முடக்கப்படும். யாழ்ப்பாணத்தில் சிலர் யூடியூப்பையே தமது வாழ்வாதாரமாக கொண்டு , செயற்பட்டு வருகின்றனர். அவர்கள் நான்கு வருடங்களுக்கு மேலாக உருவாக்கி , அதன் ஊடாக வருமானத்தை பெற்று வரும் நிலையில் அதனை முடக்க முயன்றமையால் , பாதிக்கப்பட்ட யூடியூப் சேனல் உரிமையாளர்கள் நொர்தேன் யூனி நிர்வாகத்தினருடன் கதைத்த போது, தமது நிறுவனத்தால் நடத்தப்பட்ட இசை நிகழ்வு தொடர்பில் யூடியூப்பில் விமர்சிக்கப்பட்டதாலையே தாம் அவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
ஒரு சிலரை மட்டுமே தேர்ந்து எடுத்து ஏன் ஸ்ட்ரைக் அடித்தீர்கள் என கேட்ட போது , யாருக்கு அடிக்க வேண்டும் என நாங்கள் தான் முடிவெடுப்போம். எங்களை விமர்சித்தவர்கள் தானே நீங்கள் என அவமரியாதையாக கதைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை பாதிக்கப்பட்ட யூடியூப்பர்ஸ் நொர்தேர்ன் யூனி நிறுவனத்திற்கு நேரில் சென்ற போது , அங்கிருந்த ஒருவர் மாத்திரமே அவர்களுடன் பண்பாக பேசியதாகவும் , ஏனையோர் அவர்களை அவமரியாதையாக நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலவச இசை நிகழ்வு என பெரும்பெடுப்பில் ஆரம்பித்து பின்னர் பிரமுகர் நுழைவு சீட்டு 25 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு நிகழ்வு நடத்தப்பட்டது.
நிகழ்வு ஒழுங்கமைப்பு நிறுவனத்தின் குறைப்பாடுகளால் இசை நிகழ்வில் குழப்பங்கள் ஏற்பட்ட, அது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் , இசை நிகழ்வின் குழப்பங்களை காணொளிகளாக பதிவேற்றிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த யூடியூபர்ஸ இலக்கு வைத்து அவர்களின் யூடியூப்பை முடக்குவதற்கு நொர்தேன் யூனி நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டமை ஒரு விரும்பத்தகாத செயல் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.