தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் இல்லை
வீழ்ச்சி அடைந்த நாட்டினது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் கடுமையாக உழைத்துள்ளதுடன், மறுசீரமைப்புத் தீர்மானங்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மிகச்சரியான பாதையில் கொண்டு சென்றுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணியினருடனான சந்திப்பின்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் இல்லை எனவும் இவ்வருடம் குறித்த நேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த வருட ஆரம்பத்தில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அனைவரினதும் ஒத்துழைப்புடன் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதே தமது பிரதான நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.