November 21, 2024

கச்ச தீவு திருவிழாவிற்கு ஒரு கோடி ரூபாயை அண்மித்த செலவீனம் – இந்திய தூதரகம் மௌனம்

கச்ச தீவு திருவிழாவிற்கு உத்தேச செலவீனமாக 90 இலட்ச ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் , 10 இலட்ச ரூபாயே திணைக்களங்கள் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளதாக யாழ்.,மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். 

இம்முறை பயணிகளிடம் ஒரு வழி படகு  பயண கட்டணமாக ஆயிரத்து 500 ரூபாய் பணம் அறவிடப்படவுள்ளமை , யாத்திரிகர்கள் இம்முறை தமக்கு தேவையான உணவை தாமே கொண்டு வர வேண்டும் , போன்ற அறிவுறுத்தல்கள் , யாழ்.மாவட்ட செயலகத்தால் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார் 

மேலும் , இந்திய துணைத்தூதரகம் நிதி பங்களிப்புக்களை வழங்கி வந்த நிலையில் இம்முறை அது தொடர்பில் தூதரகம் இதுவரையில் எந்தவொரு தகவலையும் எமக்கு அளிக்கவில்லை என தெரிவித்தார். 

கச்ச தீவு திருவிழா எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் , இலங்கையில் இருந்து 4 ஆயிரம் பக்தர்களும் இந்தியாவில் இருந்து 4 ஆயிரம் பக்தர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதேவேளை , தமிழக மீனவர்களை , இலங்கை கடற்படையினர் கைது செய்வதனை கண்டித்தும் , அத்துமீறி நுழைத்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும் , இராமேஸ்வர மீனவர்கள் கச்ச தீவு திருவிழாவை புறக்கணிக்கவுள்ளதாக தீர்மானம் எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert