ஈழத்தமிழர்கள் போரின் வடுக்கள் மாறாத நிலையில் இந்தியக்கலைஞர்களின் யாழ் நிகழ்வு தேவையற்றது ?
ஈழமக்களின் போர்காலம் ஊச்சநிலையை கண்ட நிலையிலும் சரி போர்முடிந்து தமிழ் இனம்படுகின்ற இன்னல்களில் பங்கெற்காத கலைஞர்கள் எமது தாயக மண்ணில் வறுமை நியைலில் உள்ள எமது மக்களிடம் தங்கள் வாழ்கைக்காக நிதி சேர்க்கும் நிலையில் ஈழம்வந்து நிகழ்வுகள் நடாத்துவது தற்னாலத்துக்கு உகந்ததல்ல என்பதை இவர்களை அழைத்தவர்களும் இன்னிகழ்வில் கலந்துகொள்ள வந்தவர்களும் சிந்தித்திருக்கவேண்டியது அவசியம்,
அதுபோல் எமது ஈழத்து உறவுகளும் சிந்திக்கவேண்டிய தருனம்
விழித்திருங்கள் நாங்களோ போர்கால வலிகளில் மட்டுமல்ல எமக்கான அரசியல் தீர்விலும் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் வாழ்வாதரத்துக்கு புலம்பெயர் உறவுகளின் கைகொடுப்பு இல்லாமல் வாழ முடியாத நிலையில் இதுபோன்ற களியாட்ட நிகழ்வுகள் தேவையா? என்பதை நீங்களே சிந்தித்து ஓர் முடிவுக்குவாருங்கள் பணத்தோடு வாழ்பவன் பணம் சேர்க்க முயல்கிறான் பட்டினியால் வாழ்பவன் தினம் கண்ணிர் வடிக்கின்றான் எமக்காக துயரங்கள் நீங்கட்டும் அதன்பின் சிந்திப்போம் :(ஈழத்தமிழன்)