ஜேவிபி முதலில பாவ மன்னிப்பு கோரட்டும்!
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதுடன் இலங்கை மக்களிடம் ஜேவிபி பகிரங்க மன்னிப்பு கோரவேண்டுமென குரல்கள் வலுத்துள்ளன.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இன்று டை கோர்ட் அணிந்து இந்தியா செல்வதற்கு முன்னர் செய்த தவறை மக்களுக்கு தெளிவாக தெரிவித்து மன்னிப்புக் கோரியிருக்க வேண்டும் என முன்னாள் சுகாதார அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முதலாவதாக மருந்துகளை தயாரித்த ஒருவர் இந்தியாவிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்ததாக ஜேவிபி படுகொலை செய்தது.இந்தியாவில் இருந்து மருந்துகளை கொண்டு வந்தார் என கொலை செய்தனர். பருப்பு கொண்டு வந்தவரை கொலை செய்தனர். அரிசி; கொண்டு வந்திருந்தால் கொலை செய்தனர்,
இலங்கை இந்திய ஒப்பந்தத்தினை எதிர்த்தனர். அன்று சரியான இடத்தில் இருந்த விஜய குமாரதுங்கவை கொன்றார்கள். ஜக்கிய தேசியக்கட்சியின் 108 பேரை கொன்றனர். அதற்கெல்லாம் காரணம் என்னவென்றால் நாம் இந்தியாவுடன் இருந்தது தான்.
இப்பொழுது அநுர குமார திசாநாயக்க டை கோர்ட் அணிந்து சென்றுள்ளார், முலில் அவர் தெளிவாக இலங்கை மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும் என ராஜித சேனாரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் உருவாகிய இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரிப்பதில் நீதிமன்ற படியேறி ஜேவிபி வெற்றி கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.