Dezember 3, 2024

ராஜீவ் காந்தி கொலை வழக்கு ! உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த இருவர்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட முருகன் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்குறித்த இருவரும்  இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சாந்தனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள முருகன், தன்னை விடுதலை செய்து, குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 28ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு விவகாரம்! உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த இருவர் | Sandhan Special Camp Fasting

இதேபோல ராபர்ட் பயஸூம், சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுவித்து, வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கக்கோரியும், அதற்கு உடனடியாக கடவுச்சீட்டு எடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யக்கோரியும், சிறப்பு முகாமில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்ய அனுமதி வழங்கக்கோரியும் நேற்று முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பாக தமிழக முதல்வர் மற்றும் தலைமைச் செயலருக்கு இருவரும் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளனர். இதனை முன்னிட்டு  சிறப்பு முகாமில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert