நிகழ்நிலை சட்டமூலம் :பழிவாங்கல் ஆரம்பம்!
நிகழ்நிலை சட்டமூலம் தனது எதிராளிகளை பழிவாங்க இலங்கை ஆட்சியாளர்கள் தயார் ஆகிவருகின்றனர்.
அவ்வகையில் இலங்கையில் நன்கு அறியப்பட்ட சண்டியன் அமைச்சர் பற்றி தகவல் இட்டவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மரணம் குறித்து இதுபோன்ற கருத்துகளை ஏற்க முடியாது என்றார்.
‘அவரது மரணம் குறித்து சமூக வலைதளங்களில் மிக மோசமான பதிவுகள் வந்துள்ளன.யார் யார் இவ்வாறான கருத்துக்களை பதிவிடுகிறார்கள் என்பது தெளிவாகி உள்ளது.
இந்த முறை விசாரித்தபோது ஒரு கட்சியை சார்ந்தவர்கள் தான் இந்த விஷயங்களை பதிவிட்டுள்ளனர். இல்லையேல், ஒருவர் இறந்தால் வேறு யாராலும் இப்படியெல்லாம் சொல்ல முடியாது..நாம் இதுபற்றி தேடினோம்,
ஒரு கட்சியில் இணைந்துள்ளவர்களே போலியான கணக்குகளை வைத்து இவ்வாறு கருத்துக்களை பதிவிட்டுள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.
முன்பு என்றால் இவற்றை கண்டுபிடிக்க முடியாது இப்போது நாம் சந்தோஷப்படுகிறோம் ஏனென்றால் இப்போது எம்மால் இவற்றை கண்டுபிடிக்க முடியும்.