யுக்திய நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிக்கை
தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும் யுக்திய நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி அதனை மறுபரிசீலனை செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம், மனித உரிமைகள் போன்ற விடயங்களில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என அந்த குழு வலியுறுத்தியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக போதை ஒழிப்பு நடவடிக்கைக்கு யுக்திய என பெயர் சூட்டி பொலிஸார் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த நடவடிக்கை , ஊடாக பொலிஸார் சட்ட ஒழுங்குகளை மீறுபவதாகவும் , மனித உரிமை மீறல்களில் பொலிஸார் ஈடுபடுவதாகவும் பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வரும் நிலையிலையே ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு யுக்திய நடவடிக்கையை நிறுத்த கோரியுயுள்ளது.
குறித்த நடவடிக்கை ஊடாக 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .