ஒற்றுமையாக சந்திக்கச் சென்றனர்!
இந்திய தூதரக அழைப்பினையடுத்து தமிழ் தேசிய கட்சிகள் இலங்கைக்கான இந்திய தூதுவரை கொழும்பில் இன்று திங்கட்கிழமை (22) சந்தித்துள்ளன.
சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், சிறீதரன், சுமந்திரன், கோவிந்தம் கருணாகரம், சாணக்கியன், சார்ள்ஸ் நிர்மலநாதன், விநோநோகராதலிங்கம், மற்றும் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சந்திப்பில் தமிழர் பகுதியில் தொடரும் திட்டமிட்ட பௌத்த ஆக்கிரமிப்பு, மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமை, அதிகாரம் பகிரப்படாமை, போன்ற விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன்இந்தியா இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்காமை தொடர்பாக தமிழர் தரப்புகள் தமது அதிருப்தியை தெரிவித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள சந்தோஸ் ஜாவை முட்டி மோதலின்றி தமிழ் தேசிய கட்சிகள் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.