அமொிக்காவின் MQ-9 ரீப்பரை சுட்டு வீழ்த்திய ஈராக் எதிர்ப்புப் படைகள்
அமெரிக்காவின் அதியுயர் தொழில்நுட்பம் கொண்ட எம்.கியூ-9 ரீப்பர் (MQ-9 Reaper) ஆலில்லா வேவு விமானமானத்தை பாக்தாத்திற்கு அருகில் சுட்டு வீழ்த்தியதாக ஈராக்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஈராக் எதிர்ப்புப் படைகள் (Iraqi Resistance) அறிவித்துள்ளது.
MQ-9 ரீப்பர் ஆளில்லா வேவு விமானம் குவைத்தில் இருந்து புறப்பட்ட பின்னர் ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே சுட்டு வீழ்த்தப்பட்டது.
அத்துடன் வேவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட காணாெளி மற்றம் புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
இரவு நேரம் வேவு விமானம் தீப் பிடித்து எரிந்தபடி வானிலிருந்து தரையில் விழுந்து எரியும் காட்சியும் அதில் பொருத்தப்பட்ட ஏவுகணையின் சில பாகங்கள் மற்றும் சிதறு துண்டுகள் என்பவற்றை காணொளிகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.
இந்த வேவு விமானத்தின் பெறுமதி 30 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இ்வ்விமானம் 48 மணி நேரம் வானில் பறந்து வேவுத் தகவல்களைச் சேகரித்து சம நேரத்தில் தாக்குதல்களை நடத்தக்கூடியது.
1850 கிலோ மீற்றர் தொலைதூரம் வரை பறப்பை மேற்கொள்ளக்கூடியது. இது 482 km/h வேகத்தில் பறக்கக்கூடியது. இதன் நிறை 2,223 கிலோ கிராம் எடை கொண்டது. 11 மீற்றர் நீளம் கொண்டது.