கச்சதீவு உற்சவத்திற்கு தயார்!
எதிர்வரும் பங்குனி மாதம் 09,10ஆம் திகதிகளில் வரலாற்றுச் சிறப்பு மிக்க புனித கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெறவுள்ள வருடாந்த திருவிழா தொடர்பான முன்னேற்பாடுகளுக்கான கள விஜயம் இன்று இடம்பெற்றது.
களவிஜயமானது எழுவைதீவில் இருந்து கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயம் வரை கடல் வழி மார்க்கமாக இடம்பெற்றது.
நெடுந்தீவு பங்கு நிலை அருட்சகோதரர். பீ.பீற்றர் ஜெயநேசன் உள்ளிட்ட மூவர் அடங்கிய குழுவினரும், மற்றும் கடற்படையினரும் விஜயத்தில் கலந்துகொண்டனர்.
விஜயத்தின் போது வருடாந்த பெருந் திருவிழாவில் இந்திய, இலங்கை மக்களின் வருகையும், அவர்களுக்கான தங்குமிட வசதிகள்,போக்குவரத்து ஒழுங்குகள் இதர பாதுகாப்பு வசதி வாய்ப்புக்கள் பற்றி யாழ்ப்பாண மாவட்ட செயலக, நெடுந்தீவு பிரதேச தலைமை நிர்வாக அதிகரிகளினால் எடுத்துக்கூறப்பட்டிருந்தது.
வீரகேசரி நாளிதழ் மற்றும் வாரவெளியீடு ஆகியவற்றின் பிரதம ஆசிரியரான ஸ்ரீகஜன் அவர்களின் மாமியார் (ஸ்ரீகஜனின் துணைவியாரான சூரியபிரபா ஸ்ரீகஜன் (முன்னாள் அறிவிப்பாளர் சக்தி- மகாராஜா குழுமம்) அவர்களின் தாயார்) திருமதி சாந்தாதேவி சூரியமூர்த்தியின் இறுதிக் கிரியைகள் நாளை (16) இடம்பெறுகின்றன.
அஞ்சலிக்காக தற்போது பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ள அன்னாரது பூதவுடல் நாளை மாலை பொரளை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரது பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று அஞ்சலி செலுத்தினார். படங்களில் மஹிந்த ராஜபக்ஷவுடன் ஸ்ரீகஜன் மற்றும் தினகரன், தினகரன் வாரமஞ்சரி ஆகியவற்றின் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் உட்பட பலர் காணப்படுகின்றனர்.