November 24, 2024

தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையில் 50ஆவது ஆண்டு நினைவேந்தல்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் பொலிஸாருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் , மின்சார கம்பி பொதுமக்களின் கூட்டத்தில் அறுந்து விழுந்ததில் ஒன்பது பேர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தனர்.

உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டார நாயக்க தலைமையிலான அரசாங்கம் பல தடைகளை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert