உக்ரைன் மீது 122 ஏவுகணை ஏவி தாக்குதலை நடத்தியது ரஷ்யா
உக்ரைன் மீது இன்று வெள்ளிக்கிழமை ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தலைநகர் கியேவ், மேற்கில் லிவிவ், கிழக்கில் கார்கிவ் மற்றும் தென்கிழக்கு துறைமுக நகரமான ஒடேசா மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
தாக்குதலில் முக்கிய இலக்குகள் கொழுந்து விட்டு எரிந்ததுடன் கட்டிடங்களும் சேதடைந்தன.
மத்திய நகரமான டினிப்ரோவில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனையில் சேதடைந்தன.
கியேவில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் என மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறினார்.
ஒடேசாவில், ஏவுகணைகள் குடியிருப்பு கட்டிடத்தை தாக்கியதில் இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் குழந்தைகள் உட்பட 15 பேர் காயமடைந்தனர் என்று பிராந்திய ஆளுநர் கூறினார்.