யேமனிலிருந்து ஏவிய டிரோனைச் சுட்டு வீழ்த்தியது பிரான்ஸ் கடற்படை!!
பிரான்சின் போர்க்கப்பல்களை நோக்கி வந்த இரண்டு ஏவுகணைகளை செங்கடல் பகுதியில் சுட்டு வீழ்த்தியுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.
யேமனின் கரையோரப்பகுதியிலிருந்து வந்த ஏவுகணைகளையே சுட்டு வீழ்த்தியுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
செங்கடல் பகுதியில் இயங்கும் லங்குயுடொக் என்ற போர்க்கப்பல் சனிக்கிழமை இரவு இந்த ஏவுகணைகளை சுட்டுவீழ்த்தியுள்ளது.
யேமனின் கரையோரத்திலிருந்து 110 கிலோமீற்றர் தொலைவில்இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை முற்றுகையிடப்பட்டுள்ள காசாவிற்கு உணவையும் மருந்துகளையும் அனுப்பாவிட்டால் செங்கடலில் இஸ்ரேலிய கப்பல்கள்அனைத்தையும் தாக்கப்போவதாக ஹெளத்தி கிளர்;ச்சியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சியோனிஸ்ட் தேசத்திற்கு கப்பல்கள்செல்வதை தடுப்போம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.