சமாதானத்தின் செய்தி தலதா மாளிகையிலிருந்து நல்லூர் நோக்கி
„சமாதானத்தின் செய்தியை தலதா மாளிகையிலிருந்து நல்லூர் நோக்கி எடுத்தும் செல்லும் பயணம்“ எனும் தொனிப்பொருளில் கண்டியில் இருந்து இளைஞர் அமைப்பை சேர்ந்தோர் யாழ்ப்பாணம் – நல்லூரை வந்தடைந்தனர்.
கண்டி தலதா மாளிகை தொடக்கம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வரை உள்ள சர்வமத தலைவர்களுக்கு சமாதானத்தின் செய்தி மற்றும் கோரிக்கைகளை முன்வைத்தல் வேலைத்திட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
கண்டி தலதா மாளிகை மற்றும் கண்டி சிறீ நாட்ட தேவாலத்திற்கருகாமையில் இந்த செயற்திட்டத்தை நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஆரம்பித்த இளைஞர்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை வந்தடைந்தனர்.
எமது சகோதர மக்களின் பறிக்கப்பட்ட நீதி மற்றும் நியாயத்திற்காக ஒன்றாக குரல் கொடுத்து சகோதர பிணைப்பின் மூலம் , உண்மை மற்றும் நீதியை கண்டறியும் எமது பயணத்தின் முதல் படியாக , நல்லிணக்கம் மற்றும் நீதிக்கான பொறிமுறைகள் , அரசியல் கலாச்சாரம் மற்றும் தேர்தல் , காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை , மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள், காணி சொத்து பாதிப்புக்கள் மற்றும் பலவந்தமாக வெளியேறல் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு , இலங்கையில் வர்த்தகம் மற்றும் நல்லிணக்கம் மற்றும் மொழி ஆகிய முன் மொழிவுகளை முன் வைத்துள்ளனர்.