யேர்மனியின் தெற்குப் பகுதியில் கடும் பனிப்பொழிவு! விமான சேவைகள் இரத்து!!

யேர்மனியின் தெற்குப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு தாக்கியுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை முதல் இன்று சனிக்கிழமை என பனிப்பொழிவு தொடர்கிறது.
யேர்மனி நாட்டின் இரண்டாவது பொிய நகரான முனிச் (முன்சன்) நகரில் பரப்பரப்பாக இயங்கிவரும் முனிச் விமான நிலையத்தில் பெரும் இடையூறுகளை இப்பனிப்பொழிவு ஏற்படுத்தியுள்ளது.
இப்பனிப்பொழிவால் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிவரை அனைத்து விமானசேவைகளை நிறுத்தி பைப்பதாக விமான நிலையம் சனிக்கிழமை கூறியது.
இன்று சனிக்கிழமை திட்டமிடப்பட்ட 760 விமான சேவைகளில் 320 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன.
குறைந்தது ஒரு விமான ஓடுபாதையில் மட்டும் சேவைகள் தற்போது நடத்தப்படுகின்றன.
பவேரியா மாநிலத்தில் பெரும்பகுதிக்கு சனிக்கிழமை பிற்பகல் வரை பனிப்பொழிவு நீடிக்கும் என் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30-40 சென்டிமீட்டர் (சுமார் 12-15 அங்குலம்) பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.