இஸ்ரேல்-ஹமாஸ் 4 நாள் போர் நிறுத்தம்: 24 பிணைக் கைதிகள் விடுவித்தது ஹமாஸ்
இஸ்ரேல்-ஹமாஸ் 4 நாள் போர் நிறுத்தம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கத்தார் அரசு மத்தியஸ்தம் செய்ததை அடுத்து முதல்கட்டமாக ஹமாசிடம் இருந்து பிணைய கைதிகள் 24 பேரும், இஸ்ரேல் சிறையில் இருந்த பாலஸ்தீனர்கள் 39 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
இஸ்ரேலை சேர்ந்த 13 பேர் தாய்லாந்தை சேர்ந்த 11 பேர் மற்றும் ஒரு பிலிப்பைன் நாட்டவர் உள்ளிட்ட 24 பேரை ஹமாஸ் விடுவித்தது.
அவர்கள் எகிப்து எல்லையான ரபா அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து உலங்க வானூர்தி மூலம் இஸ்ரேல் கொண்டு செல்லப்பட்டனர்.
பிணையகைதிகள் அனைவருக்கும் இஸ்ரேல் குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 39 பாலஸ்தீன பெண் மற்றும் குழந்தைகள் மேற்கு கரைக்கு செஞ்சிலுவை சங்கத்தின் சிற்றூர்திகளில் பயணமாயினர். இருதரப்பில் விடுவிக்கப்பட்டவர்களை காசா மற்றும் இஸ்ரேலில் அவர்களது உறவினர்கள் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர் .