மிட்டாய் வேண்டாம்:ரணிலுடன் முறுகும் டெலோ
தூ
ரணில் விக்ரமசிங்க குழந்தைகளுக்கு மிட்டாய் காட்டுவது போல தமிழர்களுக்கு அதிகாரம் இல்லாத மாகாணசபைக்குள் பல்கலைக்கழகம் கொண்டுவருவதாக ஏமாற்றுகிறார்“ என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
ரணிலுடன் நெருங்கிய உறவை பேணிவரும் தமிழீழ விடுதலை இயக்க பிரமுகரான அவர் இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் வரவு செலவு திட்டத்தில் பல்கலைக்கழகங்களுடன் மாகாணசபை அதிகாரங்களை அமைப்பதற்கான முன் மொழிவு ஒன்றை கொண்டுவந்துள்ளார்.
வேடிக்கை என்னவென்றால் மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை பகிர்வதற்கான கோரிக்கைகளை பல தடவை தமிழர் தரப்பு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் முன் வைத்தும், குழந்தைகளுக்கு மிட்டாய் காட்டுவது போல தமிழர்களுக்கு அதிகாரம் இல்லாத மாகாணசபைக்குள் பல்கலைக்கழகம் கொண்டுவருவதாக ஏமாற்றுகிறார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் உண்மையாக முதலாவது பொறுப்புக் கூறலின் ஊhடாக பக்க சார்பற்ற சுயாதீன விசாரணையே ஆகும். அதன் பின்னர் தான் பரிகார நீதி இவ்வாறான ஒழங்கு முறை மூலமே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் இதுவே பாதிக்கப்பட்ட தரப்பின் கோரிக்கையும் ஆகுமெனவும் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.