November 23, 2024

சிறுபான்மையினருக்கான பட்ஜட்!

பௌத்தத்தை அடிப்படையாக கொண்டு வரவு செலவுத் திட்ட உரையை ஆரம்பித்து ஜனாதிபதி பௌத்தத்தை அவமதித்ததுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிறேமதாச, தெரிவித்துள்ளார்.

அதே வேளை சிறுபான்மையினரின் ஆணையை வரவு செலவுதிட்ட முன்மொழிவு மூலம் ரணில் பெற்றுள்ளதாகவும் சஜித் பிறேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜ.எம்.எப் உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் வருவாய் இலக்குகளை நிறைவு செய்ய முடியாததால், இரண்டாவது ஐ. எம். எப். கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில், ஏனோ தானே அடிப்படையில் வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே காணாமல் போனவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்குவதற்கு மேலும் ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் பூநகரி நகர அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடும் யாழ்ப்பாணத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கான அடிப்படை பணிகளுக்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளதராக ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

அதேவேரள வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளக முரண்பாடுகள் முடிவுக்கு வந்தாலும் மீள்குடியேற்றப்படாத இடங்கள் இன்னும் உள்ளன. மீள்குடியேற்றத்திற்கு 2,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert