சமஷ்டி தொடர்பான கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும்
வடக்கு கிழக்கு தமிழர்களின் சமஷ்டி கோரிக்கையின் தோற்றம் தொடர்பான கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும் யாழ்ப்பாணம் – நல்லூர் சங்கிலியன் (கிட்டு) பூங்காவில் இன்றைய தினம் புதன்கிழமை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் க. லவகுசராசா தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் , வடக்கு கிழக்கு மக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், பல்கலைக் கழக மாணவர்கள், தொழில் சங்கப் பிரதிநிதிகள், மனித உரிமை பாதுகாவலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.