யேர்மனி ஹம்பேர்க்கில் பணயக்கைதிகள் நெருக்கடி தொடர்வதால் மூடப்பட்டது விமான நிலையம்
வடக்கு யேர்மனியில் உள்ள துறைமுக நகரான ஹம்பேர்க் நகரில் உள்ள விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென மகிழுந்தில் பாதுகாப்ப கடவைகளை உடைத்துக்கொண்டு விமான நிலைய சென்றுள்ளார்.
உள்ளே சென்றவர் கையில் துப்பாக்கியுடன் காணப்பட்டார். அவர் வானை நோக்கி 2 முறை துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். மகிழுந்தில் எரிந்து கொண்டிருந்த 2 பாட்டில்களையும் எடுத்து வீசினார். குறித்த மகிழுந்தில் இரு குழந்தைகளும் இருந்துள்ளனர்.
இதனால், பயணிகள், அவர்களின் உறவினர்கள் என அந்த பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இதுபற்றி தகவல் அறிந்ததும், காவல்துறையினர் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர்.
இதனை தொடர்ந்து, விமான சேவை முழுவம் நிறுத்தப்பட்டதுடன், அனைத்து முனையங்களிலும் உள்ள நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் விமான நிறுவனங்களை நேரடியாக தொடர்பு கொள்ளும்படி, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாங்கள் காவல்துறை உளவியலாளர்களை வரவழைத்து குற்றவாளியுடன் பேசுகிறோம். நாங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண உள்ளோம். என்று காவல்துறைச் செய்தித் தொடர்பாளர் சாண்ட்ரா லெவ்க்ரூன் தெரிவித்தார்.