November 23, 2024

இது போருக்கான நேரம்: ஹமாசிடம் சரணடைய முடியாது – இஸ்ரேலியப் பிரதமர்

ஹமாசால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும் என்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

இதுதொடர்பாக டெல் அவிவில் பேசிய அவர்,

காசாவில் போர் நிறுத்தம் தொடர்பான இஸ்ரேலின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நம்பிக்கை மற்றும் வாக்குறுதியின் எதிர்காலத்திற்காக நாம் போராட விரும்புகிறோமா அல்லது கொடுங்கோன்மை மற்றும் பயங்கரவாதத்திற்கு சரணடைவோமா என்பதை தீர்மானிக்க வேண்டிய நேரம் இது.

இஸ்ரேல் இந்தப் போரைத் தொடங்கவில்லை. ஆனால் இந்தப் போரில் கண்டிப்பாக நாம் வெற்றி பெறுவோம். வெற்றி வரும் வரை இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனத்தின் சக்திகளுக்கு எதிராக நிற்கும்.

பேர்ல் ஹார்பர் குண்டுவெடிப்புக்குப் பிறகு அல்லது செப்டெம்பர் 11 பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா போர்நிறுத்தத்திற்கு உடன்படாதது போல, அக்டோபர் 7 ஆம் தேதி பயங்கரமான தாக்குதலுக்குப் பிறகு ஹமாசுடனான விரோதப் போக்கை நிறுத்த இஸ்ரேல் உடன்படாது.

போர்நிறுத்தத்திற்கான அழைப்புகள் இஸ்ரேலை ஹமாசிடம் சரணடைய வேண்டும், பயங்கரவாதத்திடம் சரணடைய வேண்டும், காட்டுமிராண்டித்தனத்திற்கு சரணடைய வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் அது நடக்காது. இஸ்ரேல் இந்த போரை தொடங்கவில்லை. இஸ்ரேல் இந்த போரை விரும்பவில்லை. ஆனால் இந்த போரில் இஸ்ரேல் வெற்றி பெறும்.

சமாதானத்திற்கு ஒரு காலமுண்டு, போருக்கு ஒரு காலமுண்டு என்று பைபிள் சொல்கிறது. இது போருக்கான நேரம் என்று அவர் தெரிவித்தார். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert