November 23, 2024

கிழக்கிலும் கனடா கனவு?

வடக்கினை தொடர்ந்து கிழக்கிலங்கையிலும் வெளிநாட்டு மோகம் மக்களை ஆட்டுவிக்க தொடங்கியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளிநாடு மோகத்தினால் பணத்தை இழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முறைப்பாடு அளித்துள்ளனர்.

சுமார் 8 கோடி ரூபாவினை போலி முகவர்களின் ஆசைகளை நம்பி இழந்துள்ளதாக முறைப்பாட்டினில்  தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு என கூறி   185 பேரிடம் 8 கோடிகளுக்கு அதிகமாக  மோசடி   அரச அதிகாரிகள் சிலரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதற்கு உடந்தையாக பாடசாலை மாணவன் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.

விடயம் தொடர்பில் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு; சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன்.

மோசடியில் ஈடுபட்டவர்கள் 188 பேரை தேர்ந்தெடுத்திருந்தார்கள்.இதில் 146 பேர் டுபாய் நாட்டிற்கும் டென்மார்க் நாட்டிற்கு 20 பேரும் தாய்லாந்து நாட்டிற்கு 22 பேரும் உள்ளடங்குகின்றனர்.அத்துடன் டுபாய்  நாட்டிற்கு செல்பவர்களிடம் 350000 ரூபாவும் டென்மார் நாட்டிற்கு செல்பவர்களிடம் 550000 ரூபாவும் தாய்லாந்து நாட்டிற்கு செல்பவர்களிடம் 4 முதல் 5 இலட்சம் வரை பணம் வாங்கியுள்ளனர்.மொத்தமாக 188 பேரிடம் அண்ணளவாக 7 அரை கோடி ரூபாவினை மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert