டெங்கு:கரவெட்டிக்கு முதலிடமாம்!
வடமாகாணாத்தில் அதிகூடிய டெங்கு நோய் தொற்றிற்குள்ளான பகுதியாக கரவெட்டி பகுதி மருத்துவ அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது.வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் மிக அதிகரித்த அளவில் டெங்கு தொற்று கரவெட்டி மற்றும் பருத்தித்துறையில் கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகள்; தெரிவித்துள்ளனர்.
வடக்கு ஆளுநர் தலைமையில் நடைபெற்ற டெங்கு கட்டுப்பாடு தொடர்பிலான கலந்துரையாடலிலேயே சுகாதார திணைக்கள அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
டெங்கு தொற்றினை கட்டுப்படுத்த அப்பகுதி உள்ளுராட்சி மன்றங்கள் சொல்லிக்கொள்ளத்தக்கதாக எதனையும் செய்திருக்க தவறிவிட்டதாகவும் ஆளுநரிடம் சுகாதார திணைக்கள அதிகாரிகள் முறையிட்டுள்ளனர்.
குறிப்பாக உள்ளுராட்சி சபைகளில் பயன்படுத்தப்படாது தரித்து நிற்கும் பயன்படுத்தப்படாத வாகனங்கள் டெங்கு நுளம்பு குழம்பிகளது வதிவிடங்களாக அமைந்துள்ளமை தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.