அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் மக்களை நிம்மதியாகத் தொடர அனுமதியுங்கள்.
Raj Sivanathan (WTSL)
ஐம்பது நாட்களுக்கும் மேலாக இலங்கையில் தங்கியிருந்து கிட்டத்தட்ட ஐயாயிரம் கிலோமீட்டர் பயணத்தை முடித்து எனது சொந்த நகரமான மெல்பேர்னை அடைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் பயணம் எனக்கு பல நினைவுகளையும், அனுபவங்களையும், சோகத்தையும் அளித்துள்ளது.அதை எங்கள் இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள்(Well wishers of Tamils in Sri Lanka)(WTSL) அமைப்பின் சார்பாக அனைத்து தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சில அரசியல்வாதிகள் உட்பட பலரையும் சந்தித்தேன்.
IBC Baskaran பற்றி யாராவது தெரிந்து கொள்ள விரும்பினால், கூகுள் மூலம் போதுமான தகவல்கள் உள்ளன. அவர் பிறந்த இடம் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு, அவர் அகதியாக வெளியேறியபோது அவருக்கு 18 வயது இருக்கும், அவரும் அவரது இரண்டு நண்பர்களும் ஒரு தொலைபேசி நிறுவனத்தை வெற்றிகரமாகச் சொந்தமாக வைத்து நடத்தி வந்தனர். அது LYBARA என்று அழைக்கப்படுகிறது, பின்னர் அவர்கள் அதை பெரிய தொகைக்கு விற்ற பிறகு. அவர்கள் புத்திசாலித்தனமாக தங்கள் பணத்தை வெவ்வேறு நாடுகளில் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். அவர் தற்போது IBC மற்றும் பல ஊடகங்கள் தொடர்பான வணிகங்களை சொந்தமாக வைத்துள்ளார். வன்னியில் உள்ள அவரது இடத்திற்குச் செல்வது எனது பயணத் திட்டங்களில் ஒன்றாகும், எனவே நான் எனது சொந்த செலவில் அவரது ரீச்சா பவுண்டேஷன் ஹோட்டலில் ஒரு இரவு தங்கினேன். அவர் எனக்கும் எனது நண்பர்களுக்கும் முழு இடத்தையும் காட்டி உபசரித்தார் .விவசாய நடவடிக்கைகள் முற்றிலும் இயற்கையானவை. குறிப்பாக குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்குச் செல்ல இது ஒரு அருமையான இடம். என் அறிவின்படி அவரின் முதலீடு வடக்கில் தற்போது மிகப்பெரியது. ஒரு நாள் புலம்பெயர் சமூகமும் அவரது பங்களிப்பை பாராட்டுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நேரம், பணம் மற்றும் கடின உழைப்பு மற்றும் தனது சொந்த குடும்பத்தை வெளிநாட்டில் விட்டுவிட்டு தனது நேரத்தை செலவிடுவது இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில் எளிதானது அல்ல. அவரது ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இலங்கை அரசாங்கத்தின் உளவுத்துறை மூலம் அவர் படும் சிரமங்களையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. வெளிநாட்டில் உள்ள பொறாமை கொண்டவர்கள் அவரது முயற்சிகளையும் பங்களிப்பையும் ஊக்குவிப்பதை விட சமூக ஊடகங்களில் அவரைப் பற்றி தொடர்ந்து முட்டாள்தனமாக எழுதுகிறார்கள். தற்போது 350 பணியாளர்கள் மற்றும் 400க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் தொடர்ச்சியாக பணிபுரிந்து வருகின்றனர், மேலும் அவர் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கண்ணியமான வேலைவாய்ப்பை வழங்கி வருகிறார். தற்போது அவர் ஒரு பெரிய சிறுவர் பூங்காவை நிர்மாணித்து வருகிறார்.
ஆதாரம் இல்லாமல் விடுதலைப் புலிகளின் பணம் வைத்திருக்கிறார் என்று மற்றவர்களைப் போல் நான் குற்றம் சாட்டப் போவதில்லை. விடுதலைப் புலிகள் இவரைப் பயன்படுத்தியிருந்தாலும் குறைந்த பட்சம் வன்னி மக்களுக்காகப் பணத்தை முதலீடு செய்கின்றார். சிலர் விடுதலைப் புலிகளின் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளார்கள் ஆனால் அவர்கள் தமிழ்ப் பிரதேசங்களில் துன்பப்படும் எமது மக்களுக்கு ஒரு பைசா கூட செலவழிக்காமல் தங்களின் ஆடம்பர வாழ்க்கைக்கு செலவிடுகின்றனர். “ஒருமுறை முதல்வர் அண்ணாதுரை பத்மினியுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டபோது, அண்ணாதுரை தான்
ஒரு துறவி இல்லை என்றும் நடிகை பத்மினி படிதாண்டாப் பத்தினியும் அல்ல என்றும் கூறினார். விரல் நீட்டுவதற்குப் பதிலாக, உங்களால் ஏதாவது செய்ய முடிந்தால் அதைச் செய்யுங்கள் இல்லையெனில் அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் மக்களை நிம்மதியாகத் தொடர அனுமதியுங்கள். இறுதியாக அவர் ஒரு அரசியல்வாதி ஆக விரும்பினாலும், அல்லது பாராளுமன்ற வேட்பாளராக இருந்தாலும் சரி அல்லது ஜனாதிபதி வேட்பாளராக இருந்தாலும் சரி, அது அவரது விருப்பம். தற்போது அவர் யுத்த காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை கண்டறிந்து அவர்களின் தேவைகளை ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்து வருகிறார். எனவே எதிர்காலத்தில் அவர் தனது தனிப்பட்ட அல்லது பொது வாழ்க்கையில் எதை விரும்புகிறாரோ அது அவருடைய விருப்பம்(தொடரும்).