வடக்கில் பிச்சையெடுத்து தெற்கிற்கு வாழ்வு!
பொருளாதார நெருக்கடி காரணமாக திணறிவரும் இலங்கை அரசு வடகிழக்கில் புலம்பெயர் உதவிகள் மூலம் கிடைக்கும் உதவிகளை தெற்கிற்கு எடுத்துச்செல்ல முற்படுவது அம்பலமாகிவருகின்றது.
ஏற்கனவே முல்லைதீவு வைத்தியசாலையிலிருந்து இருதய சத்திரசிகிச்சை இயந்திரங்களை அனுராதபுரத்திற்கு கடத்திச்செல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சி தடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மடு கல்வி வலயத்தில் அமைந்துள்ள இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் மன்னார் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பெறுமதி வாய்ந்த தொழிற் பயிற்சி உபகரணங்களை ஹம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.
தொழிற்பயிற்சி அதிகார சபையின் மன்னார் தொழிற் பயிற்சி அலுவலகத்திலிருந்து அழகு சாதனம் மற்றும் சிகை அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட தொழிற் பயிற்சி உபகரணங்கள் அம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்வதற்கு ஆயத்தமாகிய நிலையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ் இளையோர்களின் தொழில் முயற்சிக்கு பயன்படுத்தாமல் அஹம்பாந்தோட்டைக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் நடைபெற்று பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக இன்று வியாழக்கிழமை வாகனமும் வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரை தொடர்பு கொண்டு பேசியதன் அடிப்படையில் குறித்த பொருட்களை ஹம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்ல இருந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது.