இனி நிர்வாக முடக்கல் !
மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை தொடர்பில், நாளை தினம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில், தீர்வு கிடைக்காது விடின் பாரிய நிர்வாக முடக்கல் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக, மயிலத்தமடு கால்நடைப் பண்ணையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு சித்தாண்டியில் மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி இன்று 25வது நாளாகவும் போராட்டம் தொடர்கின்றது.
பெரும்பான்மை மக்கள் மட்டுமா இந்நாட்டுக் குடிமக்கள், மட்டக்களப்பில் ஜனாதிபதி சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா?, தமிழர்களின் பொருளாதாரத்தை சிதைக்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைளையும் போராட்டக்காரர்கள் காட்சிப்படுத்தினர்.
ஆண்கள் மற்றும் பெண்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
புண்ணை நிலங்களை ஆக்கிரமித்துள்ள சிங்களவர்களிற்கு ஆதரவாக பௌத்த பிக்குகள் தலைமையில் எதிர் போராட்டங்கள் கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் கொழும்பில் ஜனாதிபதியுடனான பேச்சிற்கு போராட்டகாரர்களிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது அமைப்புக்கள் மேய்ச்சல் தரை போராட்டகாரர்களிற்கு தமது ஆதரவை யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் வெளியிட்டுள்ளனர்.