தமிழகத்தில் இருந்து கப்பலில் வந்தவர்கள் கேக் வெட்டினார்கள்
தமிழகம் நாகப்பட்டினம் காங்கேசன்துறையிடையிலான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் இன்றைய தினம் பரிச்சார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன் பிரகாரம் இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட குளிர் ஊட்டப்பட்ட கப்பல் மதியம் 1.15 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்திருந்தது
இந்த கப்பலில் பணியாற்றும் 14 பணியாளர்கள் மட்டுமே இந்த பரிச்சாத்த நடவடிக்கைகளின் போது வருகை தந்திருந்தனர்.
இவ் பரீட்சார்த்த நடவடிக்கைகளின் போது கப்பல் சேவைக்கு பயன்படுத்தப்படும் கடல் பாதை, கடல் மற்றும் காலநிலை நிலவரம் சகல விடயங்களும் கணக்கெடுக்கப்பட்டது.
பரீட்சார்த்த நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொண்டமையை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.சுமார் அரை மணி நேரம் தரித்து நின்ற பின்னர் மதியம் 1.45 மணியளவில் மீண்டும் இக்கப்பல் நாகப்பட்டினம் நோக்கி புறப்பட்டது.
நாகப்பட்டினம் இலங்கையிலேயே பயணிக்க இருவழிக் கட்ணமாக 53500 ரூபாயும், ஒருவழிக் கட்டணமாக 27,000ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் பயணிகள் தங்களுடன் 40 கிலோ வரை உள்ள பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் சேவையின் மூலம் நாகப்பட்டினத்தில் இருந்து வரும் 3 மணி நேரத்தில் இலங்கை சென்றடைய முடியும்.