திருட்டு மௌனத்தில் தெற்கு மதத்தலைவர்கள்?
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் உட்பட எந்தவொரு விவகாரத்திலும் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இடமளிக்காதென இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சனல் 4 தொலைக்காட்சியின் குற்றச்சாட்டுகளை இலங்கை முழுமையாக நம்பவில்லையென்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதில் இலங்கைக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனால் சர்வதேச விசாரணை வட்டத்தில் எங்களை மட்டும் குறி வைப்பது ஏன்? என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.
முன்னதாக இலங்கையில் நடந்தேறிய இன அழிப்பு தொடர்பில் சர்வதேச விசாரணையினை தமிழ் மக்கள் கோரிவருகின்றனர்.
இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையை மேற்கொள்ள அனுமதித்தால் இன அழிப்பு தொடர்பில் சர்வதேச விசாரணையினை தமிழ் மக்கள் கோருவது நியாயமாகிவிடும்.
இந்நிலையில் இன அழிப்பு இராணுவத்தையும் ஆட்சியாளர்களையும் காப்பாற்ற மல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட பலரும் முற்பட்டுள்ளமை தெரிந்ததே.