தமிழ் ஆயர்கள் போர்க்கொடி!
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அரசியல் செல்வாக்கு இல்லாமல் வெளிப்படையான விசாரணை நடத்தப்படுமானால், அது தொடர்பில் சர்வதேச விசாரணை தேவையில்லை என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
அரசு நேர்மையான அதிகாரிகள் மூலம் தலைமைத்துவத்தை எடுத்துக்கொண்டு, அரசியல் அழுத்தங்களுக்கு உட்பட்டு ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொள்ளாவிட்டால், சர்வதேசத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.
அவை அனைத்தும் வெளிப்படையான முறைகளில் செய்யப்பட வேண்டும் என்றும் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளமையே சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
இனப்படுகொலைக்கான சர்வதேவ நீதியை கோரிவரும் தமிழ் தரப்புக்கள் தெற்கில் நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரப்பட்டபோது ஆதரவை தெரிவித்திருந்தன.
அத்துடன் 2009இன் இறுதி யுத்தத்தில் முன்னெடுக்கப்பட்ட இனஅழிப்பு தொடர்பில் நீதி கோரிய தமது கோரிக்கையினை வலுப்படுத்துவதாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான சர்வதேச விசாரணையினை சுட்டிக்காட்டிவந்திருந்தனர்.
இந்நிலையில் சர்வதேச விசாரணை தேவையில்லை என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளமை தமிழ் ஆயர்கள் மற்றும் தமிழ் தரப்புக்களிடையே சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.