November 23, 2024

ஐ.நாவின் நிகழ்வில் அசாத் மெளலானா!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் ஐ.நாவின் பக்க அறை நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது பல நாடுகளின் ராஜதந்திரிகள் இந்த ஆவணப்படத்தை பார்வையிட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதனை தொடர்ந்து எழுந்த சந்தேகங்களும், கேள்விகளும் சனல் 4 இயக்குனர் மற்றும் ஆவணப்பட இயக்குனர்கள் இருவரிடமும் கேட்கப்பட்டுள்ளன.

இந்த சந்தர்ப்பத்தில் அசாத் மெளலானா திடீரென திரையில் தோன்றி எல்லோரையும் அதிர வைத்ததாகவும் தெரியவருகின்றது.  

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert