நினைவேந்தலை தடுக்க மாறி மாறி மனுத் தாக்கல்: அனைத்தையும் நிராகரித்தது நீதிமன்றம்
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வையும் ஊர்தி பவணியையும் தடை செய்யக் கோரி சிறீலங்கா காவல்துறையினர் மாறி மாறி தொடர்ச்சியாக தாக்கல் செய்யபட்ட மனுவை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துள்ளன.
நேற்று கொழும்பிலிருந்து வந்த சட்டமா அதிபர் திணைக்கழத்தின் அரச சட்டவாளர் சமிந்த விக்கிரம, காவல்துறைச் சட்டப் பிரிவுப் பொறுப்பதிகாரி சிரேஸ்ட காவல்துறை அத்தியட்கர் காளிங்க ஜெயசிங்க உட்பட்ட குழுவினர் திலீபன் நினைவேந்தலை தடை செய்யக் கோரி மனுவை யாழ் நீதிமன்றில் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்தார். ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை மேற்கோள்காட்டி யாராவது வன்முறையில் ஈடுபட்டால் அவர்களைக் கைது செய்ய முடியும் என தீர்ப்பைச் சுட்டிக்காட்டினார்.
இதேநேரம் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்யக் கோரி பருத்தித்துறை காவல்துறையினர் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பருத்தித்துறை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
திலீபனின் ஊர்தி பயணிப்பதால் வன்முறை உருவாகும் சூழல் ஏற்படும் என மனுவைத் தாக்கல் செய்தனர் காவல்துறையினர்.
வன்முறையில் யாராவது ஈடுபட்டால் அவர்களை கைது செய்ய காவல்துறையினருக்கு அதிகாரம் இருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அமைதியான நினைவு நிகழ்வுகளை தடுக்க முடியாதென உத்தரவிட்டார்.