ரணிலுக்கு சந்தர்ப்பமில்லையாம்
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவாராயின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அவருக்காக முன்னிற்கும் என நாங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் தேவையான வேட்பாளர்கள் இருக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை பாதுகாக்கும் நோக்குடனேயே ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்கினோம். அதனை நன்றாக அறிந்து கொள்ளுங்கள். அவரால் மாயாஜாலம் செய்ய முடியாது என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.
ரணில் விக்ரமசிங்க நான்கு வருடங்கள் பிரதமராக இருந்தார். ஆனால் ஒரு தடவைக் கூட அவரால் பிரதமர் பதவியை முழுமைப்படுத்த முடியவில்லை அல்லவா? குறைந்தபட்சம் கொழும்பு மாவட்டத்தில் ஐந்து இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஒருவருக்கு தனது ஆசனத்தையேனும் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை அல்லவா..
ஆகவே மக்கள் சார்பாக நாங்கள் எடுத்த தீர்மானம் ரணில் விக்ரமசிங்கவின் திறன்களை மதிப்பிடாமல் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல. அந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகவே முன்னுரிமை அளிக்கப்பட்டது.