இம்மாத இறுதியில் புடினை சந்திக்கிறார் கிம்
வடகொரிய அதிபர் கிம் ஜாங் இம்மாத இறுதிக்குள் ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க உள்ளார்.
ஆயுதம் தாங்கிய வீரர்கள் பாதுகாப்புடன் அவர் ரயிலில் பயணம் மேற்கொண்டு விளாதிவோஸ்டாக் என்ற பசிபிக் கடலோர நகரில் புதினை சந்திக்க உள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆயுதங்களைத் தருமாறு கிம்ஜாங்கிடம் புதின் கோரிக்கை விடுப்பார் என்று கூறப்படுகிறது.
உக்ரைன் -ரஷியா இடையே போர் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில் வட கொரியா அதிக ஆயுதங்களை வழங்கக்கூடும் என்று அமெரிக்கா முன்பு எச்சரித்து இருந்தது.
இரு நாடுகளுக்கும் இடையே ஆயுதப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக முன்னேறி வருவதால் அமெரிக்கா கவலையடைந்துள்ளதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி ஆகஸ்ட் 30ஆம் தேதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.