November 23, 2024

கோத்தா என்ன செய்தார்:நாளை வீடியோ!

இன அழிப்பின் கோரத்தாண்டவத்தை அம்பலப்படுத்திய சனல் 4 அடுத்து “2019 ஆம் ஆண்டு இலங்கையின் கொடிய ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் புதிய வெளியீடுகளை நாளை வெளியிடவுள்ளது.

ஈஸ்டர் குண்டு தாக்குதலை கோத்தபாயவிற்காக நடாத்திய இராணுவ அதிகாரிகள் பின்னணி கோத்தாவின் உத்தரவுகள் என பல தகவல்கள் வெளிவரவுள்ளதாக கூறப்படுகின்றது.

அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிடப்போவதாக செனல்-4 அறிவித்துள்ள நிலையில், கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையானிள் முன்னாள் பேச்சாளரே முக்கிய பாத்திரம் வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் – அனுப்புதல்கள்” என்ற தலைப்பில் நாளை (05.09.2023) ஒளிபரப்பப்படவுள்ள இந்த நிகழ்ச்சியில், ‘அரசாங்கத்திற்குள் உள்ள அதிகாரிகளே, தாக்குதல்களுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தற்போது புகலிடம் கோரி சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் வசிக்கும் பிள்ளையானின் முன்னாள் பேச்சாளர் ஆசாத் மௌலானவே இந்த காணொளியின் முதன்மையான ஆதாரமாக இருப்பதாக தகவலறிந்த தரப்புகள் தெரிவித்தன.

இலங்கையின் அரச புலனாய்வு சேவையின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஸ்; சாலியின் பங்கு உள்ளிட்ட தகவல்கள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு குண்டு வெடிப்பின் போது இலங்கையில் கடமையாற்றவில்லை என்பதை,மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலி, உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் செனல்-4 க்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே செனல் 4 இலங்கையின் கொலைக்களம் என்ற தலைப்பில் ஓர் ஆவணப்பட காணொளியை ஒளிபரப்பியது. இது இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதி வாரங்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் காணொளியாக வெளியாகியிறுந்தமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert