நயினாதீவில் கடற்படையால் ஈவிரக்கமின்றி தாக்கப்பட்ட தமிழர்;
யாழ் குடாநாட்டில் இருந்து நயினாதீவுக்கு படகில் சென்று கொண்டிருந்த தமிழ் குடிமகன் ஒருவர் ஈவிரக்கமின்றி இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இது தொடர்பிலான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
04.09.2023 அன்று 1100 மணி அளவில் அருளானந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் நாகபூஷணி அம்மன் கோயிலுக்கு செல்வதற்காக குறிகட்டுவானுக்கு வந்துள்ளார்ள். இவர்கள் நாககஸ்வரி என்ற பெயருடைய பயணிகள் படகில் பயணிக்க முட்பட்ட பொழுது அருளானந்தன் படகின் மேல் பகுதியில் ஏறி பயணிக்கத் தயாரானார். படகின் மேற் பகுதியில் சிங்களவர்களும் இருந்துள்ளார்கள். படகு ஓட்டியான பத்மகுணம் அருளானந்தத்தை மட்டும் கீழே இறங்கி சென்று அமருமாறு கூறியதால் அருளானந்தம் படகோட்டியுடன் ஏன் நான் மட்டும்?” செல்லவேண்டும் என கேள்வி எழுப்பி முரண்பட்டதாகத் தெரியவருகின்றது. படகின் மேல் இருந்த சிங்களப் பயணிகளும் அருளானந்தத்தை கீழே இறங்குமாறு அச்சுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து சிங்களப் பயணிகளின் உத்தரவை மறுத்த காரணத்திற்காக, குறித்த நபர் கடல்படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். இதன்போது அங்கிருந்த பொதுமக்களுக்கும் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.