November 23, 2024

நாங்கள் காணிகளை ஆக்கிரமிக்கவும் இல்லை வழிபாட்டிடங்கைள தகர்கவும் இல்லை

நாங்கள் சிங்கள மக்களுடைய காணிகளை ஆக்கிரமிக்கவும் இல்லை  அவர்களுடைய வழிபாட்டு இடங்களை தகர்த்துவிட்டு அங்கு எங்களுடைய வழிபாட்டு இடங்களை அமைக்கவும் இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

போயா தினத்தை முன்னிட்டு தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தையிட்டி எங்களுடைய பூர்வீக பிரதேசம். சைவத்தமிழ் மக்களுக்கு சொந்தமான காணி. காணிக்குள் வந்து சட்டவிரோதமான விகாரையை அமைத்திருக்கின்ற படியால்தான் நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

சிங்கள குடிமகன் இங்கே வந்து வீடு கட்டுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. இங்கே தமிழ் மக்களுடைய பூர்வீக காணிக்குள் வந்து சட்டவிரோதமான விகாரையை அமைத்திருப்பதை தான் நாங்கள் எதிர்க்கின்றோம். இங்கே சைவக் கோயில் இருந்ததற்கான வரலாறு உள்ளது.

ஒரு சாதாரண சிங்கள குடிமகன் தமிழ் மக்களோடு சேர்ந்து வாழ்வதற்கு விரும்பி வந்து வடகிழக்கிலே காணி வாங்கி வீடு கட்டுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. அந்த உரிமை அனைவருக்கும் இருக்கிறது.

ஆனால் திட்டமிட்ட வகையில் இன அழிப்பு செய்கின்ற நோக்கோடு, தங்களுடைய மக்களுடைய அடையாளத்தை தகர்ப்பதற்காக வருகின்ற சிங்களக் குடியேற்றங்களையும் எதிர்ப்போம்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert