போராட்டங்கள் :அக்கறையில்லை
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் நாளைய தினம் நினைவு கூரப்படவுள்ள நிலையில், மன்னாரிலும், மட்டக்களப்பிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் நீதிகோரி பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களால் தமது அலுவலக செயற்பாடுகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் அலுவலகத்தின்(ஓ.ம்.பி) தலைவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை எதிர்வரும் 6 மாத காலத்துக்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இராணுவத்திடம் உறவுகளை கையளித்து அவர்கள் இருக்கின்றனரா இல்லையாவென்ற திண்டாட்டத்தின் மத்தியில் தான் வடகிழக்கில் போராட்டத்தை மேற்கொள்வதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.