கருணா -டக்ளஸ் புதிய கூட்டு!
இலங்கையின் அரச கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் முன்னாள் அமைச்சரான கருணா என்றழைக்கப்படும் முரளிதரன் சந்தித்து பேசியுள்ளார். கடலுணவுகளை தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சந்திப்பு கடற்றொழில் அமைச்சில் இன்று நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது குறித்த கோரிக்கையுடன் புலம்பெயர் நாடுகளை பின்னணியாக கொண்ட தனியார் முதலீட்டாளர்கள் குழுவும் வருகை தந்திருந்தனர்.
இதனிடையே இலங்கையில் முன்னணி கோடீஸ்வரர்களுள் ஒருவரான முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் புலம்பெயர் நாடுகளில் தனது பினாமிகள் பேரில் பெருமளவு முதலீடுகளை செய்திருப்பதாக சொல்லப்படுகின்;றது.
ஏற்கனவே வடகிழக்கில் பாரம்பரிய மீன்பிடி தொழிலை முடக்கி கடலட்டை பண்ணைகளிற்கு கடலை விற்றுவருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.