திருகோணமலை -சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் நிகழ்வில் 100 அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டார்கள்!
திருகோணமலை எகேட் கரித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ் கரித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் (கிழக்கிலங்கை மனித மேம்பாட்டு பொருளாதார நிறுவனம்) அனுசரணையுடன், திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் எனும் தொனிப் பொருளில் 2023.08.09 ஆந் திகதி தி/ஸ்ரீ மாதுமை அம்பாள் தமிழ் வித்தியாலயத்தில் சிறுவர்கள், இளையோர்களுக்கான சுற்றுச் சூழல் மற்றும் தனி நபர் சகாதாரம் பற்றிய செயலமர்வு பணிப்பாளர் அருட்பணி.கலாநிதி.B.போல் றொபின்சன் அவர்களின் தலைமையில் இவ் நிகழ்வின் வளவாளர்களாக பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களான திரு.ச.ஷியாம் சுந்தரம், திரு.செ.உதய குமார் மற்றும் திருமதி.அ.நித்தியகலா ( PHI, PHM ) ஆகியோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிட்ட தக்கது. அத்துடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் உத்தியோகத்தர்களா திரு.G.A.பிரான்சிஸ், திரு.K.ரஜித், திரு.A.M.பிரசாத்,
திரு.A.D.பொனிபஸ்,
திரு.M.டினேஷ், ஆகியவர்களுடன்
தி/ ஸ்ரீ மாதுமை அம்பாள் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் திரு.நா.இளங்கேஸ்வரன் ஆசிரியர்களும் சு 100 அதிகமான மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்