März 28, 2025

சட்டவிரோத விகாரையை அகற்றுங்கள்: இரண்டாம் நாள் போராட்டம்

வலி வடக்கு தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுவதுடன், விகாரை அமைத்துள்ள தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தி கடந்த மே 03 ஆம் திகதி தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. https://www.youtube.com/embed/KJwb7j_8wbIஅதன் தொடர்ச்சியாக நேற்று திங்கட்கிழமை பிற்பகல் கவனயீர்ப்பு போராட்டத்தை  மீண்டும் ஆரம்பித்திருந்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. 

போராட்டகளத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

அடாத்தாக அபகரித்த மக்களது காணிகளில், அனுமதியின்றி இந்த விகாரை அமைக்கப்பட்ட நிலையில் மக்களது நிலங்களை மீள வழங்குமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert