Dezember 3, 2024

அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு சம்மதம்

தற்போதைய நிலைமையில் அரசாங்கத்தினால் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

13ஆவது திருத்தம் தான் இறுதித் தீர்வா என கொழும்பு ஊடகம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

13 ஆம் அரசியலமைப்பு திருத்தம் தான் இறுதித் தீர்வு என எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையில், புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான சூழல் இல்லை என்றும் இருக்கின்ற அதிகாரங்களைக்கொண்டு தற்காலிகத் தீர்வை வழங்குவதே எனது நோக்கம் என்றும் கூறியுள்ளார்.

தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைக்கு அமைவாக அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு தான் சம்மதம் தெரிவித்தாலும் நாடாளுமன்றமே இறுதி முடிவை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert