März 28, 2025

ஜனாதிபதி தேர்தல் செலவுக்கு முன்னுரிமை!

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு பணம் தேவை என்பதை கணக்கிட்டு உடனடியாக தமக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க மற்றும் ஆணைக்குழுவின் ஏனைய அதிகாரிகளை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்த ஜனாதிபதி, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியை உள்ளடக்கி அதற்கான பணத்தை ஒதுக்குமாறும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் நிதியமைச்சுக்கு அறிக்கை அனுப்புமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் நிதி அமைச்சுடன் கலந்துரையாடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக செலவிடப்பட்ட பணம் தொடர்பில் உரிய மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு விரைவில் நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert