November 21, 2024

இலங்கையில் 10 இலட்சம் சிறுவர்கள் பட்டினியில்..

இலங்கையில் 9 மாகாணங்களையும் உள்ளடக்கிய கணக்கெடுப்பின்படி 05 வயதுக்குட்பட்ட சுமார் 10 இலட்சம் சிறுவர்கள் மற்றும் பெண்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5 வயதுக்குட்பட்ட 300,746 ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் 671,142 பெண்கள் உட்பட நாடு முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 971,888 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திலேயே அதிகளவான மக்கள் ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 05 வயதுக்குட்பட்ட 85,847 ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளும் 196,197 பெண்களும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய மாகாணத்தில் 05 வயதுக்குட்பட்ட 30,393 போசாக்கு குறைபாடுள்ள சிறுவர்களும், 126,976 பெண்களும் , தென் மாகாணத்தில் 05 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 37,032 பேரும், பெண்கள் 79,254 பேரும் இருப்பதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடமேற்கு மாகாணத்தில் 47,765 குழந்தைகளும் 68,763 பெண்களும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வடமத்திய மாகாணத்தில் 19,067 சிறுவர்களும் 38,869 பெண்களும் போசாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஊவா மாகாணத்தில் 05 வயதுக்குட்பட்ட 18,278 சிறுவர்களும், 46,175 பெண்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 17,180 சிறுவர்களும் 54,394 பெண்களும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert