November 21, 2024

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வருகை !

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் மோகன் குவாத்ரா இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

கட்டுநாயக்க விமானம் நிலையத்தின் ஊடாக நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு நாட்டை வந்தடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியினுள் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert