டெல்லி செல்லாமலே தமிழீழம்:சுமா திட்டம்!
தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எதிர்வரும் ஜூலை மாதம் வரை பொறுமையாக இருக்குமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியிடம் ரணில் விக்ரமசிங்க வாக்குறுதி வழங்கியுள்ளார் என இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழர் பிரச்சினைக்கான தீர்வுகளுக்காக ஜனாதிபதியிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சி கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
„அது தொடர்பில் ஆராய்ந்து ஜூலை மாதத்தின் பின் உரிய நடவடிக்கை எடுப்பதற்கே ஜனாதிபதி இவ்வாறு கால அவகாசம் விதித்துள்ளார். அதுவரை நாம் பொறுமையுடன் காத்திருக்கின்றோம் எனவும் எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிட்டுள்ளார்.
தமிழ் கட்சிகள் டெல்லிக்கு பயணிக்கவுள்ளதாக தெற்கில் அரசியல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
இந்நிலையில் எமது பிரச்சினைக்கான தீர்வைத் தேடி நாம் இந்தியா செல்ல வேண்டிய தேவை இல்லை.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேசி தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம் என நம்புகிறோம் எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
htt
கூட்டமைப்பில் தமிழரசுக்கட்சி தனித்து செயற்பட்டுவருகின்ற நிலையில் புதிய தமிழ் தேசியக்கூட்டமைப்பு தனது பங்காளிக்கட்சிகள் சகிதம் டெல்லிக்கு பயணிப்பது தொடர்பில் கருத்துக்கள் வெளியிடப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.