மத்திய பாரிஸில் நடந்த வெடிப்பில் 33 பேர் காயம்: இருவரைக் காணவில்லை!!
மத்திய பாரிஸில் ஒரு பெரிய வெடிப்பில் முப்பத்தேழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பிரெஞ்சு தலைநகரின் ஐந்தாவது வட்டாரத்தில் உள்ள Rue Saint-Jacques இல் உள்ள வடிவமைப்பு பள்ளி மற்றும் கத்தோலிக்க கல்வி அமைப்பின் தலைமையகம் உள்ள கட்டிடத்தில் நேற்று புதன்கிழமை வெடிப்பு நடந்தநது.
குறைந்தபட்சம் இருவரைக் காணவில்லை என நினைத்து, தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் தேடி வருகின்றனர்.
இந்த வெடிப்புச் சம்பவத்தால் அருகில் உள்ள கட்டிடத்தின் சாரளரங்களில் உள்ள கண்ணாடிகளும் உடைந்தன.
வெடிப்புக்கு முன்பு வாயுவின் கடுமையான வாசனை இருந்தது. எனினும், வெடிவிபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டிடம் முதலில் தீ பிடித்து எரிந்தது ஆனால் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று பாரிஸ் காவல்துறை தலைவர் லாரன்ட் நுனெஸ் கூறினார்.
இடிபாடுகளுக்கு அடியில் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் எங்கு காணப்படலாம் என்பதை மோப்ப நாய்கள் அடையாளம் கண்டுள்ளதாக பிரான்ஸஉள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் அவர்கள் கூறினார்.